செண்டிமெண்ட் இல்லாமல் ஜாலியாக மாறிய பாலாஜி சகோதரரின் வரவு!

 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ப்ரீஸ் டாஸ்க் உண்டு என்பதும் ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் வருகை தர இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இன்றைய முதல் மற்றும் இரண்டாவது புரோமோ வீடியோவில் ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஷிவானிக்கு அறிவுரை கூறும் காட்சிகளும் அவரது தவறுகளை கண்டித்த காட்சிகளும் இருந்தன. இந்த நிலையில் மூன்றாவது புரமோவில் பாலாஜியின் சகோதரர் வீட்டுக்குள் வருகிறார் 

அவரைப் பார்த்து பாலாஜி அழுது கட்டி பிடிப்பார்  என்று எதிர்பார்த்தால் ’உனக்கு போய் நான் அன் ப்ரீஸ் ஆனேனே என்று அவரையே கலாய்க்கிறார். மீண்டும் அவரின் சகோதரர் திருப்பி கலாய்க்கும் வகையில் என்னை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி சொல்கிறாயே என்று கூறினார். மேலும் நான் உன்னை நான் மோட்டிவேஷன் செய்யலாம் என்று வந்தேன், ஆனால் நீ என்னை அசிங்கப் படுத்தி விட்டாய் என்று திருப்பி கலாய்த்தை மற்ற போட்டியாளர்கள் ரசித்து வருகின்றனர்

balaji brother

மேலும் இப்பொழுது வரை நீ நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறாய், இதேபோல் தொடர்ந்து விளையாடு என்று அவரை ஊக்கப்படுத்திய பாலாஜியின் சகோதரர் பின்னர் அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.  பொதுவாக போட்டியாளர்களின் உறவினர்கள் வரும்போது சென்டிமென்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலாஜி அந்த டிரெண்டை மாற்றி அதையும் கலகலப்பாக மாற்றியுள்ளது அனைவரையும் ரசிக்கும் வகையில் இருந்தது


 

From around the web