சிம்பு குறித்து வெளியான திருமணச் செய்திகள் அனைத்தும் வதந்தியே… டி.ராஜேந்தரின் ட்வீட்!!

சிம்புவின் தங்கை இலக்கியா மற்றும் குறளரசனுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பது சிம்புவின் திருமணத்தைத்தான். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்தினை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அவரும் வாயைத் திறந்தபாடில்லை, ஆனால் தற்போது சிம்புவின் நெருங்கிய நண்பரான VTV கணேஷ் சிம்புவின் திருமணத்தை பற்றி கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அந்த செய்தியினைக் கேட்ட சிம்பு ரசிகர்கள் வலைதளங்களில் சிம்பு புகைப்படங்களை ட்ரெண்ட் ஆக்கினர். ஆனால் மற்றொருபுறம் சிம்பு திருமணம் குறித்த
 
சிம்பு குறித்து வெளியான திருமணச் செய்திகள் அனைத்தும் வதந்தியே… டி.ராஜேந்தரின் ட்வீட்!!

சிம்புவின் தங்கை இலக்கியா மற்றும் குறளரசனுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து அனைவரும் எதிர்பார்த்து இருப்பது சிம்புவின் திருமணத்தைத்தான். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்தினை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

அவரும் வாயைத் திறந்தபாடில்லை, ஆனால் தற்போது சிம்புவின் நெருங்கிய நண்பரான VTV கணேஷ் சிம்புவின் திருமணத்தை பற்றி கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அந்த செய்தியினைக் கேட்ட சிம்பு ரசிகர்கள் வலைதளங்களில் சிம்பு புகைப்படங்களை ட்ரெண்ட் ஆக்கினர்.

சிம்பு குறித்து வெளியான திருமணச் செய்திகள் அனைத்தும் வதந்தியே… டி.ராஜேந்தரின் ட்வீட்!!

ஆனால் மற்றொருபுறம் சிம்பு திருமணம் குறித்த வதந்திகள் வேறு லெவலாக ட்ரெண்டாகின. இந்தநிலையில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தரைத் தொடர்புகொண்டு ஊடகங்கள் இதுகுறித்து விசாரிக்க, டி. ராஜேந்தர் இதுகுறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது, “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படிக்கு டி.ராஜேந்தர் மற்றும் உஷா” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின்மூலம் சிம்பு குறித்து வெளியான திருமணச் செய்திகள் அனைத்தும் வதந்தி என்பது தெளிவாகிறது.

From around the web