ரஜினி கட்சி ஆரம்பித்தால்… பாஜக தலைவர் எல்.முருகனின் பேட்டி

ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜக அதனை வரவேற்கும் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் அவர்கள் இன்று கோவையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்றும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும், பாஜக – அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூட்டணியில் குழப்பம் இல்லை என்றும் பாஜக தமிழக தலைவர் எல். முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சசசிகலா
 

ரஜினி கட்சி ஆரம்பித்தால்… பாஜக தலைவர் எல்.முருகனின் பேட்டி

ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜக அதனை வரவேற்கும் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் அவர்கள் இன்று கோவையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது என்றும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும், பாஜக – அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் கூட்டணியில் குழப்பம் இல்லை என்றும் பாஜக தமிழக தலைவர் எல். முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் சசசிகலா சொத்துக்களை முடக்கியதில் அரசியல் இல்லை என்று கூறிய எல்.முருகன் ரஜினி கட்சி குறித்த கேள்விக்கு ‘ரஜினி கட்சி ஆரம்பித்தால் பாஜக அதனை வரவேற்கும் என்று தெரிவித்தார். மேலும் கூட்டம் கூட்டியதற்காக வழக்கு போட்டால் தமிழக எம்.பி எம்எல்ஏக்கள் மீதும் வழக்கு போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web