குற்றமற்றவருக்கு விடுதலை கேட்கிறோம்: பேரறிவாளன் குறித்து விஜய் சேதுபதி 

 
குற்றமற்றவருக்கு விடுதலை கேட்கிறோம்: பேரறிவாளன் குறித்து விஜய் சேதுபதி

குற்றமற்றவருக்கு விடுதலை கேட்கிறோம் என பேரறிவாளனை விடுவிக்க நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய பல திரையுலக பிரமுகர்கள் இன்று காலை முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 

perarivalan

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பார்த்திபன், நடிகர் விஜய் ஆண்டனி உள்பட பலர் ஏற்கனவே இது குறித்து தங்களது சமூக வலைதளங்களில் கருத்து கூறியுள்ள நிலையில் சற்று முன் நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக ஆளுநர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

From around the web