வாக்கிங், சைக்கிளிங், டேன்சிங்: மலைப்பாதையில் பிரபல நடிகையின் வீடியோ!

பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனை ஆகவே நடித்து இருந்தார் என்பதும் அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், தற்போது இரண்டு படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் மலைப் பாதை ஒன்றில் வாக்கிங் சைக்கிளிங் மற்றும் டான்சிங் குறித்த வீடியோக்களை பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோவில் அவர் மலைப்பாதையில் நடந்து செல்வதும் சைக்கிளிங் செல்வதும் புதுமையான அனுபவமாக இருப்பதாகவும் அடிக்கடி நான் இதேபோல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் மலைப்பகுதியில் மரங்களுக்கு இடையே அவர் ஒரு குத்தாட்டம் ஒன்றையும் போட்டுள்ளார் இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது