மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி... இந்த வருடம் சிம்புக்கு ஜாக்பாட் தான்!...

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மூவரும் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் வரிசையில் இருக்கிறது. இந்த வருடம் சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்நிலையில் பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவரது பிறந்தநாளையடுத்து மாநாடு படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் அடுத்த அதிரடியாக சிம்புவின் 47-வது படம் பற்றிய அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. 

இன்றளவும் சிம்புவின் சிறந்த படங்களில் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. அது ஒரு மேஜிக் என்றே சொல்லலாம். இந்நிலையில் VTV-யின் அதிரடி காம்போவான இயக்குனர் கௌவ்தம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மூவரும் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் சிம்புவின் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாளில் இதைவிட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை. இந்த படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


 

From around the web