செவிகளுக்கு விருந்தளிக்கும் விழியிலே பாடல்.....,

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் புகழ் பெற்றார் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் வெளியாகிய வேலைனு வந்தா வெள்ளக்காரன், கதாநாயகன், போன்ற இவரின் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய தோற்றத்தில் உருவாகியுள்ள திரைப்படம் F.I.R(பைசல் இப்ராகிம் ராய்ஸ்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வந்த் இசையமைத்துள்ளார் இப்படத்தில் நடிகர் விஷாலுடன் , நடிகை ரைசா வில்சன், நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். நடிகர் விஷாலுடன் பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
தனது திரைப்பட இயக்கத்தினால் ரசிகர்களை கட்டிக் கொண்டவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன். இந்நிலையில் இவரது நடிப்பின் திறனும் சமீபகாலத்தில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பாக இவரது நடிப்பின் வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களுக்கு இவரது நடிப்புத்திறன் மீது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் " விழியிலே"சிங்கிள் ட்ராக் நல்ல வரவேற்பை பெற்றது .இதனால் மகிழ்ச்சியடைந்த நடிகர் விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்
Thank you @thisisysr sir for launching our first track from #FIR 😊#Vizhiyile is here for you guys to enjoy. Listen and let me know:)
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) February 2, 2021
LINK - https://t.co/EbkSwzYiii
An @MusicAshwath musical. @VVStudioz @itsmanuanand @shravanthis111 @divomovies @proyuvraaj pic.twitter.com/iSEnMT0TX1