விவேக்கின் மரணம் பேரிழப்பு! உலகநாயகனின் இரங்கல்!சினிமாவே சோகம்!

நடிகர் விவேக்கின்  மரணம் பேரிழப்பாகும் என்று கூறும் உலகநாயகன் கமலஹாசன்!
 
விவேக்கின் மரணம் பேரிழப்பு! உலகநாயகனின் இரங்கல்!சினிமாவே சோகம்!

மனிதர்களை சிரிப்போடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைப்பவர் நடிகர் விவேக் நடிகர். விவேக் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்து இல்லாத வசனமே இருக்காது. அந்த படி அவர் தனது நடிப்போடு சமூக மீதும் அக்கறை கொண்டவராக வலம் வந்தார். அவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பல இளம் நட்சத்திரங்களுடன் புதுமுக இயக்குனர் களுடனும் பணியாற்றியிருந்தார். இந்நிலையில் பேர்பெற்ற நல்ல மனிதரான நடிகர் விவேக் மரணமடைந்தது சினிமா திரையுலகையே கண்ணீருக்குள் உள்ளாக்கியது.

vivek

அவர் நேற்றைய தினம் திடீரென்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி பெற்றிருந்தார். மேலும் அவரைப்பற்றி நேற்றையதினம் மருத்துவர்கள் கூறிருந்தனர். அதன்படி 24 மணி நேரத்திற்கு பின்னரே நடிகர் விவேக்கின் உடல்நிலை பற்றி கூறப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறி 24 மணி நேரம் கூட அதற்கு முன்னர் நடிகர் விவேக் மரணமடைந்து ஒட்டுமொத்த மக்களையும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார். மேலும் அவர் மரணத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பற்றிய சில தகவல்களையும் அவருக்கு புகழாரம் செலுத்தியுள்ளார். அதன்படி நடிகர் விவேக்கின் மரணம் பேரிழப்பாகும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்து விட்டதுஎன்று இருக்காமல் சமூகத்திற்கு ஏதேனும் செய்ய விரும்பியவர் நடிகர் விவேக் என்றும் கமலஹாசன் கூறினார். மேலும் அப்துல் கலாமின் இளவலாக,பசுமை காவலராக வலம் வந்த நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பை தருவதாகவும் உலக நாயகன் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

From around the web