தமிழ்நாட்டின் விவேகானந்தர்: முத்துராமலிங்க தேவருக்கு பிரபல நடிகர் புகழாரம்!

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழா இன்று அவரது பிறந்த இடமான பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது 

இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மதுரை சென்று உள்ளனர் என்பதும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

தேவர் ஜெயந்தியை தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பசும்பொன் தேவர் குறித்து அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் புகழாரம் செய்து வருகின்றனர்

அந்த வகையில் நடிகர் விவேக் தனது டுவிட்டரில் பசும்பொன் தேவர் அவர்களை தமிழ்நாட்டின் விவேகானந்தர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: தேசத்தை தெய்வமாகப் பார்த்தவர்; விவேகானந்தரின் சீடரான நேதாஜியை தன் குருவாகக் கொண்டவர்; குடிக்கும் நீர் விலைக்கு வரும், விளை நிலங்கள் வீடுகள் ஆகும் என்று அன்றே எச்சரித்தவர்.மண், பொன்,பெண் ஆசை அற்றவர்; தமிழ்நாட்டின் விவேகானந்தர்!


 

From around the web