கூட்டுப்பிரார்த்தனைக்கு ஒரு தனி சக்தி உண்டு: நடிகர் விவேக்கின் வீடியோ

பிரபல பாடகர் எஸ்பிபி அவர்கள் குணமாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஏற்கனவே நடிகர் விவேக் வீடியோவும், டுவிட்டும் பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது நாளை நடைபெறவுள்ள கூட்டுப்பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: என் அன்பு ரசிகப் பெருமக்களே , உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்களே! உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது மிகவும்
 

கூட்டுப்பிரார்த்தனைக்கு ஒரு தனி சக்தி உண்டு: நடிகர் விவேக்கின் வீடியோ

பிரபல பாடகர் எஸ்பிபி அவர்கள் குணமாகி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று ஏற்கனவே நடிகர் விவேக் வீடியோவும், டுவிட்டும் பதிவு செய்திருந்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது நாளை நடைபெறவுள்ள கூட்டுப்பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

என் அன்பு ரசிகப் பெருமக்களே , உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்களே! உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவும் உலகத்தில் உள்ள பல கோடி மக்கள் ஒரே நேரத்தில், ஒரு காரியத்திற்காக பிரார்த்தனை செய்யும்போது அதனுடைய சக்தியே தனி. இந்த கூட்டுப்பிரார்த்தனை மூலமாக பலர் மீண்டும் வந்துள்ளார்கள். அதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளது

அதுபோல் நம்முடைய எஸ்பிபி அவர்களுக்காக நாமும் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்கள் நாளை இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு உஎஸ்பிபி அவர்களுக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்

’ஆயிரம் நிலவே வா’ என்று வாழ்க்கையை ஆரம்பித்தவர் ’ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா? அநியாயமாக அவரை கொரோனாவுக்கு பலியாக விடலாமா? எனவே அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்

இவ்வாறு நடிகர் நடிகர் விவேக் கூறியுள்ளார்

From around the web