என்னைவிட எதார்த்தமாக எளிமையாக பேசக்கூடியவர் விவேக்!"வைகைபுயல்"

நடிகர் விவேக் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் வைகைபுயல் வடிவேலு!
 
என்னைவிட எதார்த்தமாக எளிமையாக பேசக்கூடியவர் விவேக்!"வைகைபுயல்"

தனது காமெடி திறத்தால் மட்டுமின்றி தனது கருத்தாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து உள்ளனர் நடிகர் விவேக். நடிகர் விவேக் பிரபலங்கள் பலருடனும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் தொடங்கி இன்றுள்ள ஹரிஷ் கல்யாண் வரை பலருடனும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் நேற்றையதினம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது அவர் இறந்த சம்பவம் திரையுலக மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

vivek

மேலும் அவரின் உடலுக்கு ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பிரபல இயக்குனர்கள் பிரபலங்கள் நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என பட்சபாதம் இன்றி அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பலரும் செய்தியாளர்கள் மத்தியில் நடிகர் விவேக்கின் உடன் இருந்த அனுபவத்தையும் பகிர்ந்தனர்.

அதன்படி தற்போது அவருடன் பல படங்களில் நடித்திருந்த வைகைப்புயல் வடிவேலு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் பொது நல சிந்தனை அதிகம் கொண்ட என் நண்பர் விவேக் மறைவு செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது என்றும்  இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நான் விவேக்கின் ரசிகன் என்றும் கூறினார். மேலும் அவர் என்னைவிட எதார்த்தமாக எளிமையாக பேசக் கூடியவர் என்றும் நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web