நடிகர் விவேக் வீட்டுக்குள்ளும் நுழைந்த கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் பல பிரபலங்களுக்கு குறிப்பாக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்கின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10
 

நடிகர் விவேக் வீட்டுக்குள்ளும் நுழைந்த கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்

தமிழகத்தில் பல பிரபலங்களுக்கு குறிப்பாக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்கின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது மைத்துனர், கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி

மேலும் அரசு மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு தயங்காமல் சென்று சிகிச்சை பெற்று கொள்ளவும் என நடிகர் விவேக் இந்த ட்விட்டில் பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web