எம்ஆர் ராதா எம் எஸ் கே அவர்களுக்கு பின்னர் விவேக்!நடிகர் அருள்தாஸ் புகழாரம்!

எம்ஆர் ராதா எம் எஸ் கே அவர்களுக்கு பின்னர் தனது படங்களில் சமூக கருத்துக்களை வைத்தவர் நடிகர் விவேக் என்று புகழாரம் கூறினார் நடிகர் அருள்தாஸ்!
 
எம்ஆர் ராதா எம் எஸ் கே அவர்களுக்கு பின்னர் விவேக்!நடிகர் அருள்தாஸ் புகழாரம்!

மக்களுக்கு காமெடியோடு நிறுத்திவிடாமல் பல்வேறு கருத்துக்களையும் தனது காமெடியால் வெளிப்படுத்தியவர் நடிகர் விவேக். குறிப்பாக இவரின் காமெடி திறனும் இவரின் பஞ்ச் டயலாக்கும் மக்களை நல்லதொரு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. மேலும் இவரின் படத்தில் ஒவ்வொரு காமெடியிலும் எங்கேயாவது கருத்து இல்லாமல் இருக்காது என்ற அளவிற்கு தனது காமெடியை பெரிதாக எண்ணாமல் சமூக சீர்திருத்த கருத்துகளையே பெரிதாக எண்ணி தனது காமெடியை கூறியிருப்பார். நடிகர் விவேக் மேலும் இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

மேலும் இவர் தமிழகத்தில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல குணமுள்ள நடிகர் விவேக் தற்போது மரணம் அடைந்து  ரசிகர்களை மிகுந்த சோகத்தில் தள்ளினார். மேலும் அவர் நேற்றைய தினம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி பெற்ற நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவரின் உடலுக்கு ரசிகர்கள் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினரும் நேரில் வந்து சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

தற்போது குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி  செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்படி அவர் நடிகர் விவேக் நகைச்சுவை நடிகராக சமூக கருத்துக்களை வலியுறுத்தி வந்தார் என்றும் அவர் கூறினார். மேலும் தன் எம்ஆர் ராதா எம் எஸ் கே அவர்களுக்கு பின்னர் நடிகர் விவேக் தனது படங்களில் காமெடியோடு கருத்துகளையும் சேர்த்து கூறினார் என்றும் அவர் கூறினார். மேலும் அவருடைய ஒவ்வொரு கருத்துக்களும் சமூகத்துக்கும் இருந்தது என்றும் நடிகர் அருள்தாஸ் கூறினார்.

From around the web