எத்தனை உயரம் இமயமல அதில் இன்னொரு சிகரம் எங்க தல: விஸ்வாசம் பாடல் வரி

தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவது தெரிந்ததே. அதில் வயதான அஜித்தின் அறிமுக பாடலின் இரண்டு வரிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. எத்தனை உயரம் இமயமல அதில் இன்னொரு சிகரம் எங்க
 

எத்தனை உயரம் இமயமல அதில் இன்னொரு சிகரம் எங்க தல: விஸ்வாசம் பாடல் வரி

தல அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவது தெரிந்ததே. அதில் வயதான அஜித்தின் அறிமுக பாடலின் இரண்டு வரிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. எத்தனை உயரம் இமயமல அதில் இன்னொரு சிகரம் எங்க தல’ என்பதுதான் அந்த இரண்டு வரிகள். இந்த இரண்டு வரிகளும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஒலிப்பதிவு செய்து முடிக்கப்பட்டதாக இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள கவிஞர் அருண்பாரதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ArunbharathiA/status/1043931670217338880

From around the web