பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு இன்று கமல் தரும் விருந்து

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 40வது நாளை தொட்டுவிட்டது. ஆனால் பார்வையாளர்களின் மனதை மட்டும் இன்னும் இந்த நிகழ்ச்சியால் தொடமுடியவில்லை. ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடித்து வருவதால் இந்த நிகழ்ச்சியில் உண்மைத்தன்மையை பார்க்க முடிவதில்லை என்று பார்வையாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சுயபுராணம் சற்று அதிகமாக இருந்தாலும் கமல் தோன்றும் சனி, ஞாயிறு மட்டும் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை கமல் தனது அரசியல் மற்றும் சினிமாவுக்கும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வருகிறார்
அந்த வகையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் ‘விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஸ்வரூபம் 2’ படத்தின் முதல் டிரைலர் மற்றும் பாடல் ஒன்றும் இதே பிக்பாஸ் மேடையில் வெளியானது என்பது தெரிந்ததே
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசன், ராகுல்போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர்கபூர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.
Are you ready for the next trailer from #Vishwaroopam2? Don't miss it on Big boss tonight!#VR2Trailer2#Vishwaroopam2FromAug10 @ikamalhaasan @GhibranOfficial @PoojaKumarNY @andrea_jeremiah@RajeshMSelva @kunal_rajan @RKFI #WizamIsBack pic.twitter.com/Dqhojmrmjy
— Aascar Film (@Aascars) July 28, 2018