விஸ்வரூபம் 2′ படத்திற்கு போட்டியாகும் ‘கோலமாவு கோகிலா

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டரை வருடங்களுக்கு பின் வெளியாகும் கமல் படம் என்பதால் இந்த படத்திற்கு அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் விஸ்வரூபம் 2 படத்திற்கு கோலமாவு கோகிலா’ கடும் போட்டியை கொடுக்க வாய்ப்பு
 
viswaroopam kolamavu kokila

விஸ்வரூபம் 2′ படத்திற்கு போட்டியாகும் ‘கோலமாவு கோகிலா விஸ்வரூபம் 2′ படத்திற்கு போட்டியாகும் ‘கோலமாவு கோகிலா

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இரண்டரை வருடங்களுக்கு பின் வெளியாகும் கமல் படம் என்பதால் இந்த படத்திற்கு அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே ஆகஸ்ட் 10ஆம் தேதி நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாராவின் இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் விஸ்வரூபம் 2 படத்திற்கு கோலமாவு கோகிலா’ கடும் போட்டியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது படத்திற்கே போட்டியாக நயன்தாராவின் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web