இயக்குனர் விசுவுக்கு திரையுலகம் அஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் அவலத்தை ரொம்பவும் அழ வைக்காமல் கொஞ்சம் ஜாலி கேலி கலந்து இயல்பான முறையில் தனது படங்களில் சொல்பவர் விசு. இதனாலேயே விசு படங்கள் என்றால் அந்த காலத்தில் தியேட்டருக்கு சாரை சாரையாக பெண்கள் கூட்டம் படை எடுத்தது. இவரின் சம்சாரம் அது மின்சாரம் மத்திய அரசின் தேசிய விருதுவில் தங்க தாமரை விருதுபெற்ற படம். இன்றும் பலருக்கும் மறக்க முடியாத திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். பெண்மணி அவள் கண்மணி,மணல் கயிறு, சகலகலா சம்மந்தி,
 

நடுத்தர வர்க்கத்தின் அவலத்தை ரொம்பவும் அழ வைக்காமல் கொஞ்சம் ஜாலி கேலி கலந்து இயல்பான முறையில் தனது படங்களில் சொல்பவர் விசு.

இயக்குனர் விசுவுக்கு திரையுலகம் அஞ்சலி

இதனாலேயே விசு படங்கள் என்றால் அந்த காலத்தில் தியேட்டருக்கு சாரை சாரையாக பெண்கள் கூட்டம் படை எடுத்தது. இவரின் சம்சாரம் அது மின்சாரம் மத்திய அரசின் தேசிய விருதுவில் தங்க தாமரை விருதுபெற்ற படம்.

இன்றும் பலருக்கும் மறக்க முடியாத திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். பெண்மணி அவள் கண்மணி,மணல் கயிறு, சகலகலா சம்மந்தி, மாப்பிள்ளை சார்,வேடிக்கை என் வாடிக்கை, வரவு நல்ல உறவு, வீடு மனைவி மக்கள், சிதம்பர ரகசியம் , சின்ன மாப்ளே என பல படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார் விசு.

சிறந்த நடிகர் மற்றும் இயக்குனரான இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர் நடிகர் மனோபாலா மற்றும் இயக்குனர் ஆர் வி உதயக்குமார் போன்றோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

From around the web