சாக்ஷிக்கு பட்டப்பெயர் சூட்டிய பார்வையாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாள் இரவில் பெண்கள் அனைவரும் வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அபிராமி தனக்கு கவின் மீது ஈர்ப்பு உள்ளதாக தெரிவித்தார். ஆனால் கவினுக்கோ சாக்ஷி மீது தான் கவனம் இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், பிக்பாஸ் வீட்டில் சாக்ஷியும், கவினும் காதலிக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியது. சாக்ஷியிடம் நெருக்கமாக இருந்தபோதே லோஸ்லியாவிடம் பழகினார் கவின். கவின் லோஸ்லியாவிடம் வலிய சென்று பேசினார். தனியாக அழுதும், கவினிடம் கோபம் காட்டியும் நிகழ்ச்சியில்
 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாள் இரவில் பெண்கள் அனைவரும் வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அபிராமி தனக்கு கவின் மீது ஈர்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் கவினுக்கோ சாக்‌ஷி மீது தான் கவனம் இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம், பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷியும், கவினும் காதலிக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கியது. 

சாக்ஷிக்கு பட்டப்பெயர் சூட்டிய பார்வையாளர்கள்!சாக்‌ஷியிடம் நெருக்கமாக இருந்தபோதே லோஸ்லியாவிடம் பழகினார் கவின். கவின் லோஸ்லியாவிடம் வலிய சென்று பேசினார். தனியாக அழுதும், கவினிடம் கோபம் காட்டியும் நிகழ்ச்சியில் உலா வந்தார். இதை எல்லாம் பார்த்த லோஸ்லியா கவினிடம் இருந்து விலகினார். 


இரு பெண்களின் உணர்வுகளில் கவின் விளையாடியதாக கமல் கண்டித்தார். அறிவுரைகள் வழங்கினார். அப்போது பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த உற்சாகக் குரலை தனக்கு சாதமாக பார்த்தார் சாக்‌ஷி. 

லோஸ்லியா வழக்கம் போல கவனிக்கவில்லை. கேள்விக் கேட்கும் போது கிராமம் டாஸ்கில் கொ.ப.செ பட்டத்தை கவினுக்கு கொடுக்காமல் சாண்டிக்கு கொடுத்தார் சாக்‌ஷி. 

அதை தொடர்ந்து டாஸ்கில் சரியாக விளையாடதவர்கள் குறித்து பிக்பாஸ் கேட்ட போது சாக்‌ஷியின் பெயரை சொன்னார் கவின். இதனால் இருவருக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. ஆனால் கேமிராவை மனதில் கொண்டு பொறுமையாக இருந்தார் சாக்‌ஷி.

இவர் நடிக்கிறார் என்பதை உணர்ந்த பார்வையாளர்கள் சாக்‌ஷிக்கு ‘ஸிநேக்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

From around the web