விஸ்வரூபம் 2′ திரைவிமர்சனம்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் புரமோஷன் சுமாராக இருந்ததால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் கமல் ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. மேலும் முதல் நாள் முதல் காட்சியே பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பதால் இந்த படம் ‘விஸ்வரூபம்’ அளவுக்கு வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம் கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் ரா உளவுத்துறையின் ரகசிய அதிகாரிகள். இவர்களில்
 
viswaroopam

விஸ்வரூபம் 2′ திரைவிமர்சனம்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் புரமோஷன் சுமாராக இருந்ததால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் கமல் ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. மேலும் முதல் நாள் முதல் காட்சியே பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகவில்லை என்பதால் இந்த படம் ‘விஸ்வரூபம்’ அளவுக்கு வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் ரா உளவுத்துறையின் ரகசிய அதிகாரிகள். இவர்களில் கமல்ஹாசன், ஆண்ட்ரியாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியாக அறிவித்து பின்னர் சிறையில் தள்ளி ராணுவத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் டாஸ்க் நடக்கின்றது. அங்கிருந்து பாகிஸ்தானுக்கு தீவிரவாதியாக செல்லும் கமல், தீவிரவாதிகளின் ரகசியங்களை அவ்வப்போது உளவுத்துறைக்கு அனுப்புகிறார். இந்த நிலையில் லண்டன் கடலில் செயற்கையாக பூகம்பம் ஏற்படுத்தி செயற்கை சுனாமியை ஏற்படுத்த முயல்கிறார் உமர். அவருடைய முயற்சியை முறியடித்து உமரின் தீவிரவாத செயல்களை கமல் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பதுதான் மீதிக்கதை

விஸ்வரூபம் 2′ திரைவிமர்சனம்கமல்ஹாசனின் நடிப்பை விமர்சனம் செய்வதற்கு கூட ஒரு தகுதி வேண்டும். அவர் அளவிற்கு சினிமாவையே மூச்சுக்காற்றாய் சுவாசிப்பவர் இன்னொருவரை பார்க்க முடியாது. அவர் சாதாரணமாக பேசும் வசனத்தை கூட ஆழ்ந்து சிந்தித்தால் மிகப்பெரிய தத்துவம் அடங்கியிருக்கின்றது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கமல் இந்த படத்தில் ஒரு நடிப்பு பல்கலைக்கழகத்தையே நடத்தியுள்ளார்.

பூஜாகுமாருக்கு கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் லிப்கிஸ், படுக்கையறை காட்சியும் ஆண்ட்ரியாவுக்கு கொஞ்சம் ஆக்சன் காட்சியுடன் கூடிய நக்கல் காட்சிகளையும் இயக்குனர் கமல் கொடுத்துள்ளார்.

விஸ்வரூபம் 2′ திரைவிமர்சனம்சேகர் கபூரின் நடிப்பும், ராகுல் போஸ் நடிப்பும் கமலுக்கு இணையாக உள்ளது. நாசர் ஒரே காட்சியில் வந்தாலும் திருப்தி தருகிறார். அனந்த் மகாதேவன் தேசதுரோகியாகவும் உயரதிகாரியாகவும் நடித்துள்ளார்.

ஜிப்ரானின் இசையில் மூன்று பாடல்களும் சூப்பர். இப்படி ஒரு பின்னணி இசை இதுவரை தமிழ்ப் படங்களில் வந்ததில்லை என்று கூறலாம்.

ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம் அழிப்பு காட்சிகளில் கேமிரா புகுந்து விளையாடியுள்ளது. எடிட்டிங் கச்சிதம்

கமல்ஹாசனின் திரைக்கதையில் எத்தனை கூர்மை என வியக்க வைக்கின்றது. வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய காலகட்டத்தை நக்கலடிக்கும் வகையில் உள்ளது,.

மொத்தத்தில் இந்த படம் ஹாலிவுட் திரையுலகினர்களே வியக்கும் வகையில் உள்ள அற்புதமான படம். ஆனால் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களுக்கு புரியுமா? என்பது சந்தேகம்தான்

ரேட்டிங்: 4/5

From around the web