'விஸ்வாசம்’ இந்த நடிகரின் உண்மை கதையா? இயக்குநர் சொன்ன பதில்...

 இயக்குனர் சிவா  தனது தம்பி பாலாவின் கதையை தான் திரைப்படமாக எடுத்துள்ளார் என தகவல் பரவி வருகிறது
 

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடித்த திரைப்படம் தான் விஸ்வாசம், இப்படம் அப்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் ஆனது.

மேலும் இப்படத்திற்கு தற்போது மிக பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆம், சமீபத்தில் இப்படத்தின் படங்களுக்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதனிடையே விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் பிறந்த சகோதரரும், நடிகருமான பாலாவின் கதை என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.

ஆம், அன்பு என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா. இவர் கேரளாவைச் சேர்ந்த அம்ருதா என்ற பாடகியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு அவந்திகா என்ற மகள் உண்டு.

மேலும் பாலா-அமிர்தா தம்பதிகள் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி விண்ணப்பித்து விட்டு பிரிந்து வாழ்ந்ததாகவும், இதனையடுத்து கடந்த 2019ஆண்டு இவர்களுக்கு கேரள நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியது.

ஆகையால் இயக்குனர் தனது தம்பி பாலாவின் கதையை தான் திரைப்படமாக எடுத்துள்ளார் என தகவல் பரவி வருகிறது. இது குறித்து பதிலளித்த இயக்குனர் சிவா "இந்த நேரத்தில் ’விஸ்வாசம்’ படத்தின் இசைக்கு கிடைத்த விருது குறித்து மட்டுமே பேச விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் எதிலும் நான் இல்லை என்பதால் அதில் என்ன வைரலாகி வருகிறது என்பது எனக்கு தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, என் தம்பியின் வாழ்க்கைக்கும் ’விஸ்வாசம்’ படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

From around the web