கொரோனாவால் தள்ளி போகும் விஷ்ணு விஷால் வரவேற்பு நிகழ்ச்சி 

விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். 

 
கொரோனாவால் தள்ளி போகும் விஷ்ணு விஷால் வரவேற்பு நிகழ்ச்சி

விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தனர். லாக்டவுன் நேரத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் என்று கூறி பத்திரிகையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் திருமண திட்டம் குறித்து விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது, எங்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது. பதிவுத் திருமணம் தான். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொறுப்புடன் செயல்பட விரும்புகிறோம். எனவே, எங்கள் திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளோம். திருமண ஏற்பாடுகளை எல்லாம் ஜுவாலா தான் கவனித்து வருகிறார். நான் சும்மா போய் தாலி கட்டினால் போதும் என்று நினைக்கிறேன்.

தேனிலவு திட்டம் எல்லாம் இல்லை. கொரோனாவால் நிலைமை சரியில்லை. அதனால் நாங்கள் எங்கும் செல்லப் போவது இல்லை. திருமணத்திற்கு பிறகு குடும்பத்தார், நண்பர்களுடன் சில நாட்கள் இருந்துவிட்டு அவரவர் வேலைக்கு கிளம்பிவிடுவோம் என்றார்.

From around the web