தனது இரண்டாவது திருமணத்தின் தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!!!

 ஏப்ரல் 22 ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா  திருமணம் நடைபெற இருக்கிறது
 
 
தனது இரண்டாவது திருமணத்தின் தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்துள்ளார். 

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்', 'காடன்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 

இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். எனினும் தனது மகன் ஆர்யன் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

மேலும் அவரும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் தற்போது காதலித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் மாலத்தீவு கடற்கரையில் தனது காதலியுடன் நேரம் செலவிட்டு வந்தனர். தற்போது தனது வரவிருக்கும் அடுத்த படமான 'காடன்' படத்தின் வெளியீட்டுக்கு அவர் தயாராகி வருகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ராணா நடிக்கிறார். 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது திருமண தேதியை தற்பொழுது அறிவித்துள்ளார் அதாவது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா  திருமணம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

From around the web