முடிவுக்கு வந்தது விஷாலின் அடுத்த படம்! விரைவில் ரிலீஸ்!

 

விஷால் நடிப்பில் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வந்த ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும் ஒரு சில காட்சிகள் மற்றும் படமாக்க வேண்டியது இருந்தது 

இந்த நிலையில் அந்த காட்சிகளின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விஷாலிடம் அனைவரும் விடைபெற்றுச் சென்ற வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது 

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது என்றும் விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது என்பதும் இந்த வழக்கின் முடிவில் தான் இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்பது உறுதியாக தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web