ரசிகர்களுக்கு விஷால் அளிக்கும் தீபாவளி விருந்து!

 

விஷால் நடித்த அயோக்யா’ மற்றும் ‘ஆக்சன்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்துள்ள ’துப்பறிவாளன் 2’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவ்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் விஷாலின் ’சக்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் ஓடிடியில் வரும் தீபாவளி அன்று ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஷால் தனது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘சக்ராவை அளிக்கின்றாஅர்.

விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே ராகவா லாரன்ஸின் ‘லட்சுமி பாம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற நிலையில் தற்போது ‘சக்ரா’வும் இணைந்துள்ளது. இன்னும் என்னென்ன திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web