விஷாலின் 'சக்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: தியேட்டரா? ஓட்டியா?

 

கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகிய இரண்டிலும் மாறி மாறி திரைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் தான் ரிலீஸ் செய்ய விருப்பம் தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் விஷாலின் 'சக்ரா’ திரைப்படம் முதலில் ஓடிடியில் ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதன் தயாரிப்பாளர் தனது முடிவை மாற்றிக் கொண்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்

chakra

சற்று முன் வெளியான தகவலின்படி 'சக்ரா’ திரைப்படம் பிப்ரவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தில் விஷாலுடன் சாரதா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே, ரெஜினா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web