மத்திய அரசு ஓகே சொல்லியிருச்சு, மாநில அரசு எப்போ சொல்லும்? விஷால்

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருந்த நிலையில் நேற்று மத்திய அரசு திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது இதனை அடுத்து திரையுலகினர் பலர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் முன்னாள் நடிகர் சங்க செயலாளரும், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மத்திய அரசுக்கு தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
 

மத்திய அரசு ஓகே சொல்லியிருச்சு, மாநில அரசு எப்போ சொல்லும்? விஷால்

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருந்த நிலையில் நேற்று மத்திய அரசு திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது

இதனை அடுத்து திரையுலகினர் பலர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் முன்னாள் நடிகர் சங்க செயலாளரும், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மத்திய அரசுக்கு தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கின்றேன். மத்திய அரசு அறிவித்தது போல் மாநில அரசும் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் என்றும் இதுகுறித்த தேதியை விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன்’ என்று விஷால் கூறியுள்ளார்.

From around the web