அண்ணாத்த படப்பிடிப்பு ரத்தானதால் லாபமடைந்த விஷால் படக்குழு: பரபரப்பு தகவல் 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்திற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரூபாய் 5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாகவும் ஆனால் தற்போது கடந்த 5 மாதங்களாக இந்த செட் பயன்படுத்தப்படாமல் சும்மாவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ரஜினிகாந்த் இப்போதைக்கு படப்பிடிப்பிற்கு வர வாய்ப்பில்லை என்பதால் இந்த செட்டை அப்படியே வேறொரு நிறுவனத்துக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. விஷால் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு இந்த செட் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த செட்டை அந்த படக்குழுவினர் விலை கொடுத்து வாங்கி விட்டதாகவும் விரைவில் இந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 

’அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்தானதால் இந்த செட் மூலம் விஷால் படக்குழுவினர் தற்போது லாபம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web