9 வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரே படத்தில் விஷால்-ஆர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு

 

விஷால் மற்றும் ஆர்யா கடந்த 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கிய ’அவன் இவன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் செய்திகள் வெளியாகின 

இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படம் மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 

இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web