நடிகர் விஷால் மீது 2பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரிவினர் விஷாலுக்கு எதிராக சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இதை எதிர்த்த விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்து அந்த பூட்டை உடைக்க முயன்றார். அப்போது அங்கு வந்த போலீசார் பூட்டை உடைக்க வேண்டாம் என்று விஷாலிடம் கூறினர். அதற்கு திருட்டுத்தனமாக போடப்பட்ட பூட்டை, உடைத்துதான் அலுவலகத்திற்குள் செல்வேன் என்று, உதவி ஆணையர் கோவிந்தராஜுடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டின் சாவி பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளதாகவும் அதனை பெற்று வந்து
 

தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு பிரிவினர் விஷாலுக்கு எதிராக சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இதை எதிர்த்த விஷால் தனது ஆதரவாளர்களுடன் வந்து அந்த பூட்டை உடைக்க முயன்றார்.

நடிகர் விஷால் மீது 2பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அப்போது அங்கு வந்த போலீசார் பூட்டை உடைக்க வேண்டாம் என்று விஷாலிடம் கூறினர். அதற்கு திருட்டுத்தனமாக போடப்பட்ட பூட்டை, உடைத்துதான் அலுவலகத்திற்குள் செல்வேன் என்று, உதவி ஆணையர் கோவிந்தராஜுடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டின் சாவி பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளதாகவும் அதனை பெற்று வந்து திறந்து உள்ளே செல்லுமாறும் விஷாலை போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் பூட்டை உடைத்து தான் உள்ளே செல்வேன் என்று விஷால் பிடிவாதம் பிடித்தார்.

துணை ஆணையர் அரவிந்தன் எவ்வளவோ சொல்லியும் கேட்காத விஷால் கடைசியில் பூட்டை உடைக்க சென்று கைது செய்யப்பட்டார்.

பிரச்சினையை பேசி தீர்த்து கொள்வதாக விஷாலின் அப்பா ஜி கே ரெட்டி கூறினார்.

நடிகர் விஷால் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிஆர்பிசி 151-வது பிரிவின் படி பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தல், மற்றும் சிஆர்பிசி 145-ன் படி நிலப்பிரச்சனை உள்ள இடத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் செயல்படுவது ஆகிய பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

From around the web