அஜித் பிறந்த நாளில் இணையும் விஷால்-தனுஷ்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் இதனை அடுத்து அடுத்த மாதம் முதல் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் விஷாலின் சக்ரா திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதியை தல அஜித் பிறந்தநாளில் வெளியாகும் எனக்
 
அஜித் பிறந்த நாளில் இணையும் விஷால்-தனுஷ்

விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் இதனை அடுத்து அடுத்த மாதம் முதல் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஷாலின் சக்ரா திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதியை தல அஜித் பிறந்தநாளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அதே தேதியில் தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ என்ற படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், ரெஜினா, ஷராதாஸ்ரீநாத், மனோபாலா, ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

From around the web