விருமாண்டி கொடுத்த விறுவிறுப்பான படம்: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் வாய்ப்பு!

 

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் ’ஐயப்பனும் கோஷியும்’ என்பது தெரிந்ததே. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தெலுங்கு திரையுலகம் முந்திக் கொண்டது

பிரித்விராஜ் மற்றும் பிஜூமேனன் நடித்த கேரக்டர்களில் பவன்கல்யாணும், ராணாவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்தான் இந்த படத்தின் கதை என்பதால் ஒவ்வொரு மோதலும் சுவராஸ்யமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த படத்தை தெலுங்கில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளனர் 

aiswarya rajesh

இந்த நிலையில் படத்தின் ’ஐயப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக அருமையாக நடித்ததை அடுத்து இந்த படத்தில் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது

அதுமட்டுமின்றி க/பெ ரணசிங்கம் இயக்குனர் இயக்கும் அடுத்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் ஒருவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அந்த படத்திலும் நடிக்க அவர் ஐஸ்வர்யா ராஜேஷை அணுகி உள்ளதாகவும் தெரிகிறது

விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட க/பெ ரணசிங்கம் படத்தில் மிக அருமையான கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்ததை அடுத்து அவருக்கு தற்போது திரைப்படங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web