சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் அஜித்: ஆன்லைன் மோசடி குறித்த கதை?

ஆன்லைன் மோசடி குறித்த கதை ஒன்றை அஜித்திடம் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் கூறியதாகவும், அந்த கதை அஜித்தை மிகவும் கவர்ந்துவிட்டதால் அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் முடிந்துவிடும். அதன் பின்னர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எச்.வினோத் இந்த
 

சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் அஜித்: ஆன்லைன் மோசடி குறித்த கதை?

ஆன்லைன் மோசடி குறித்த கதை ஒன்றை அஜித்திடம் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் கூறியதாகவும், அந்த கதை அஜித்தை மிகவும் கவர்ந்துவிட்டதால் அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் முடிந்துவிடும். அதன் பின்னர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எச்.வினோத் இந்த படத்திற்கான முதல்கட்ட பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் அஜித்: ஆன்லைன் மோசடி குறித்த கதை?சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை பார்த்த அஜித், இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றஎண்ணத்தில் இருந்தபோது சரியாக வினோத் அவரை அணுகியதாகவும், இதன் காரணமாகவே இந்த படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது

From around the web