வினயனின் ஹாரர் பட சீரிஸில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

பிரபல மலையாள இயக்குனர் வினயன். தமிழில் வந்த என் மன வானில், காசி போன்ற படங்களின் இயக்குனர் இவர். இவர் 2000ல் இயக்கிய படம் ஆகாசகங்கா, அந்த படத்தின் தொடர்ச்சியாக ஆகாச கங்கா 2 திரைப்படம் உருவாகிறது. ஹாரர் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ட்ரெண்ட்டை உருவாக்கி இருந்தார் வினயன். வினயன் இயக்கிய மற்றோரு ஹாரர் படம் வெள்ளி நட்சத்திரம் இது 2005ல் வெளியானது இதுவும் வெற்றிப்படமாகும். ‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக்,
 

பிரபல மலையாள இயக்குனர் வினயன். தமிழில் வந்த என் மன வானில், காசி போன்ற படங்களின் இயக்குனர் இவர். இவர் 2000ல் இயக்கிய படம் ஆகாசகங்கா, அந்த படத்தின் தொடர்ச்சியாக ஆகாச கங்கா 2 திரைப்படம் உருவாகிறது.

வினயனின் ஹாரர் பட சீரிஸில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

ஹாரர் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ட்ரெண்ட்டை உருவாக்கி இருந்தார் வினயன்.

வினயன் இயக்கிய மற்றோரு ஹாரர் படம் வெள்ளி நட்சத்திரம் இது 2005ல் வெளியானது இதுவும் வெற்றிப்படமாகும்.

‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி என பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் பாகமானது கிராஃபிக்ஸ் வேலைகளுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மிரட்டலாக உருவாக இருக்கிறது.

பஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைக்கிறார்.

பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

ஆகாச கங்கா படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது

From around the web