விக்ரமின் ‘கோப்ரா’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏஆர் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருவதை அடுத்து ‘கோப்ரா’ படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து விக்ரம் மற்றும் ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘கோப்ரா’ அப்டேட் வெளிவந்துள்ளது விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான விஷயம் ஆகும். மேலும் இந்த படத்தின் டீஸர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது