விக்ரமை நெருக்கும் தயாரிப்பாளர்: பொன்னியின் செல்வனுக்கு சிக்கலா?

 

விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் அவரது அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்ட திரைப்படம் மகாவீர் கர்ணன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து இந்த படத்தை விக்ரம் கண்டுகொள்ளவே இல்லை 

இதனை அடுத்து விக்ரமுக்கு ரூபாய் 6 கோடி சம்பளம் இந்த படத்திற்காக சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்கள் மகாவீர் கர்ணன்’ படத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது. 

இதனால் விக்ரம் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்வது தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்திடம் அந்த தயாரிப்பாளர் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்கு திட்டமிட்டபடி விக்ரமால் செல்ல முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் மகாவீர் கர்ணன் படத்தை முடித்துக் கொடுக்க விக்ரம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web