கர்ணனை பார்த்துவிட்டு இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்...

 

சீயான் விக்ரம் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜின் வீடு தேடி சென்று வாழ்த்து சொல்லி ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
 
கர்ணனை பார்த்துவிட்டு இயக்குநருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தி தனுஷ், ரெஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்த கர்ணன் படத்தில் லால், கௌரி கிஷன், பிரியா சந்திரமௌலி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தினை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுக்களை பகிர்ந்துவரும் நிலையில், சீயான் விக்ரம் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜின் வீடு தேடி சென்று வாழ்த்து சொல்லி ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

இதேபோல், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் நடித்த கர்ணன் படத்துக்கும் இயக்குநருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், கர்ணன் பேசும் ரியாலிட்டி வலியை தருகிறது என்றும் தனுஷின் பெர்ஃபார்மென்ஸை பார்த்து ஆச்சரியப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தனுஷை‘நடிப்பு கர்ணா!’ என பாராட்டியுள்ளார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது என்பதும் விக்ரம்-துருவ் விக்ரம் நடிக்கும் சியான்60 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார் என்பதும், இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


 

From around the web