சன் டிவியில் ஒளிபரப்பாகும் விக்ரம் பிரபு படம்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்பட பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகியுள்ளது. இந்த நிலையில் நேரடியாக சன் டிவியிலும் அதன்பிறகு சன் நெக்ஸ்ட் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ள திரைப்படம் புலிக்குத்தி பாண்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

pulikuthi pandi

விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். ’கும்கி’ திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்து ஆக்சன் திரைப்படமான இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விக்ரம் பிரபு தாடியுடன் ஆவேசமாக கையில் ஒரு கத்தியுடன் வைத்துள்ள காட்சியும் பின்னணிகள் அவரை சிலர் விரட்டிக் கொண்டு வரும் காட்சியும் உள்ளன

இந்த படம் சன் டிவியில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பதாகவும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

From around the web