2021 தீபாவளிக்கு வெளியாகிறது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம்

கமலுடன் லோகேஷ் இணையும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படத்தை இயக்கியவர் லோகேஷ். 

இந்த படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக அவர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இது கமல்ஹாசனுக்கு 232 வது படம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு 'விக்ரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1986-ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் வேட்டி சட்டையுடன் இருக்கும் சிலருடன் கமல்ஹாசன் அமர்ந்து அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது போல படத்தின் டைட்டில் டீசர் கடந்த வருடம் வெளியானது. இதைப் பார்த்த பொழுது கைதி படத்தில் இடம்பெற்ற பிரியாணி சீன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. எது எப்படியோ அடுத்த சூப்பர் ஹிட் தயாராகிறது என்பது மட்டுமே என்று தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'விக்ரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 1986-ல் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் வேட்டி சட்டையுடன் இருக்கும் சிலருடன் கமல்ஹாசன் அமர்ந்து அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது போல இந்த டீசர் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும் பொழுது கைதி படத்தில் இடம்பெற்ற பிரியாணி சீன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. எது எப்படியோ அடுத்த சூப்பர் ஹிட் தயாராகிறது என்பது மட்டுமே என்று தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் கமலுடன் லோகேஷ் இணையும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. மேலும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில், பிரபுதேவா, அனிருத் போன்றோர் இணைய உள்ளனர். மேலும் 2021-ஆம் வருடம் தீபாவளிக்கு இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web