உண்மையாகவே சீயான் ஆகிவிட்டார் விக்ரம்!


 

 

சீயான் விக்ரம் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அக்ஷிதா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார் என்றும் எனவே விக்ரம் விரைவில் தாத்தா ஆகபதவி உயர்வு பெற போகிறார் என்றும் கூறப்பட்டத்

இந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் விக்ரம் மகளுக்கு குழந்தை பிறக்கவிருப்பதாகவும், விக்ரம் தான் தாத்தா ஆகும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரமை ரசிகர்கள் செல்லமாக சீயான் என்று கூறி வரும் நிலையில் சீயான் என்றால் கிராமத்தில் தாத்தா என்று அர்த்தம் என்ற நிலையில் பெயருக்கேற்றவாறு உண்மையிலேயே விக்ரம் விரைவில் தாத்தா ஆகப்போகிறார்.

vikram daughter

இந்த நிலையில் விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் விக்ரம் நடிக்க போகிறார் என்பதும், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரம் மகன் துருவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web