நடந்து சென்று வாக்களிக்க என்ன காரணம்... விக்ரம் விளக்கம்?

நடிகர் விக்ரம் வாக்களிப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றுள்ளார். 
 

தமிழத்தின் சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்காக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்றனர். குறிப்பாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க சென்றது இந்தியளவில் பேசப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் விக்ரம் வாக்களிப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்றுள்ளார். அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

அதற்கு காரணம் அவர் தினமும் வாக்கிங் போகும் இடம் இது தானாம்.


 

From around the web