மிரட்டும் விக்ரமின் கோப்ரா டீசர்...

கோப்ரா படத்தின் டீஸர் வெளி வந்துள்ளது. டீசரை பார்க்கையில் இவர் ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் போல தெரிகின்றது.
 

எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்த கூடிய நடிகர் என்றால் அது நம்ம CHIYAAN விக்ரம் தான், ஆனால் கடந்த 10 வருடங்களாக இவரது படங்கள் எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.

மிகவும் சர்வ சாதாரணமாக படங்களையும், கதைகளையும் தேர்வு செய்து வருகிறார் விக்ரம். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விக்ரம், தொடர்ந்து ஒரு ஆறு ஏழு தோல்விப் படங்கள் கொடுத்தால்கூட தற்போது 5 புது படங்களில் நடித்து வருகிறார்.

அவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணன்,பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் படம் போன்ற படங்களும் உள்ளது.

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் டீஸர் வெளி வந்துள்ளது. டீசரை பார்க்கையில் இவர் ஒரு சாதாரண கணக்கு வாத்தியார் ஆகவும் கணக்கை வைத்து பல கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்க போலீசுக்கு உதவுவதாகவும் தெரிகிறது.

From around the web