தாத்தா ஆகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்: ஆச்சரிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தாத்தாவாக இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் ஒரு கேரக்டரை ஒப்படைத்தால் அந்த கேரக்டராவே மாறி விடும் நடிகர்களில் ஒருவர் என்ற புகழ் பெற்றவருமான நடிகர் விக்ரம் தாத்தாவாக போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது விக்ரம் அக்ஷிதா கர்ப்பமாக
 

தாத்தா ஆகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்: ஆச்சரிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் தாத்தாவாக இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் ஒரு கேரக்டரை ஒப்படைத்தால் அந்த கேரக்டராவே மாறி விடும் நடிகர்களில் ஒருவர் என்ற புகழ் பெற்றவருமான நடிகர் விக்ரம் தாத்தாவாக போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது விக்ரம் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதாக வெளிவந்த தகவலால் விக்ரம் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விக்ரம்தான் தாத்தாவாக போவதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

54 வயதானாலும் இன்னும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் விக்ரம் தாத்தா வாங்கி விட்டார் என்பதை நம்பாமல் கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

இந்த நிலையில் மீது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் அவரது மகன் துருவ் விக்ரம் தான் ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி விக்ரம் ஏற்கனவே ’கோப்ரா’ மற்றும் ‘துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web