விக்ரமை நினைத்து உருகிய மகன் துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா படம் தயாராகி இருந்தது. தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் இப்படம் தமிழில் ஈ 4 எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க பாலா இயக்கி இருந்தார். பின்பு பாலா இயக்கியது பிடிக்காமல் அந்த நிறுவனம் வர்மா படத்தை கை விடுவதாக அறிவித்து அதை ஆதித்ய வர்மா என்ற பெயரில் வேறு இயக்குனரை வைத்து இயக்க முடிவு செய்தது. இதை அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியஇயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டியின் அசிஸ்டண்ட் கிரிசய்யா இயக்குவதாக
 

துருவ் விக்ரம் நடிப்பில் வர்மா படம் தயாராகி இருந்தது. தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் இப்படம் தமிழில் ஈ 4 எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க பாலா இயக்கி இருந்தார். பின்பு பாலா இயக்கியது பிடிக்காமல் அந்த நிறுவனம் வர்மா படத்தை கை விடுவதாக அறிவித்து அதை ஆதித்ய வர்மா என்ற பெயரில் வேறு இயக்குனரை வைத்து இயக்க முடிவு செய்தது.

விக்ரமை நினைத்து உருகிய மகன் துருவ் விக்ரம்

இதை அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியஇயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டியின் அசிஸ்டண்ட் கிரிசய்யா இயக்குவதாக அறிவித்து விக்ரமும் உடன் இருந்து முழுவதும் பார்த்துக்கொண்டாராம். இப்போது படப்பிடிப்பு முடிந்து டீசரும் வெளியாகி விட்டது.

இந்நிலையில் துருவ் விக்ரம், தனது அப்பா விக்ரம் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 

அதில், “ஒவ்வொரு நாளும் வந்ததற்கு, விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு, எப்போதும்சிறப்பாகச் செயல்பட வைத்ததற்கு, சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ததற்கு, லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு, எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் தெளிவாக இருந்ததற்கு, நான் நம்பிக்கை இழப்பதை அனுமதிக்காமல் இருந்ததற்கு, எனக்காக ‘ஆதித்யா வர்மா’வைத் தந்து, உருவாக்கியதற்கு, முடிந்த எல்லாவற்றையும் செய்ததற்கு, எப்போதும் எனக்கு ஆதரவு தந்ததற்கு, உங்களுக்குத் தெரிந்த அத்தனையையும் தொடர்ந்து எனக்குக் கற்றுத் தந்தற்கு…. நீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.
 

இந்தப் படத்துக்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்தீர்கள் என்பதைத் தெரிந்த ஒருவர், டீஸரில் உங்கள் பெயர் எங்கே என்று கேட்டார். அது என் பெயருக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் இருக்கிறது என்றேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. உங்களைப் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம்.

From around the web