மகனுடன் செம க்யூட் லுக்கில் எமி ஜாக்ஸன்... வாவ் என்ன அழகான தருணம்!...

நடைபழகும் மகனிற்கு எமிஜாக்சன் வார்த்தைகளை சொல்லித் தருவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான 'மதராஸப்பட்டினம்' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவர் 'தாண்டவம்', 'ஐ', 'தங்க மகன்', 'கெத்து', 'தெறி' என தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

George Panayiotou என்பவரை காதலித்து வருவதாக அறிவித்த எமிக்கு, தற்போது ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் பற்றி முன்பு அவர் கூறும்போது "நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். 

என் பையன் ஆண்ட்ரியாஸ் முன், இந்த வாழ்வு எனக்கு நியாபகம் இருப்பதில்லை.  அவனது முகம், கண்ணம், சிறிய சிரிப்பை பார்க்கும் போது ஒவ்வொரு காலையும் எனக்கு தூய்மையான தியானம் போன்றது'' என்று கூறியிருந்தார். 

அந்த அளவிற்கு மகனின் மீது பாசம் வைத்துள்ள எமி ஜாக்சன் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி தற்போது முழு நேரமாக தனது மகனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கையாள்கிறார். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது மகனுடன் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சிறு குழந்தையில் பார்த்த மகன் தற்பொழுது நன்றாக வளர்ந்து விட்டார். நடைபழகும் அவருக்கு எமிஜாக்சன் வார்த்தைகளை சொல்லித் தருவது மிகவும் க்யூட்டாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web