சூர்யா பட பாடலுக்கு க்யூட் எக்ஸ்பிரசன் தந்த விஜய்டிவி ஜாக்குலின்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை நினைத்தாலே உடனே அதை தொகுத்து வழங்கும் ரக்சன் மற்றும் ஜாக்லின் தான் ஞாபகத்துக்கு வரும். தற்போது அவர்கள் இல்லாதது அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தற்போது சீரியல்களில் பிசியாக இருக்கும் ஜாக்குலின் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் பதிவு செய்த ஒரு வீடியோ ஒன்றில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு அழகிய எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளார்
ஜாக்குலினின் குழந்தை முகத்திற்கு அந்த எக்ஸ்பிரஷன் மிகவும் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்த ஜாக்குலின் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது