பிக்பாஸ் புரமோ வீடியோவை திடீரென நீக்கிய விஜய்டிவி: என்ன காரணம்?

 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 30 ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை விளம்பரபடுத்தும் நோக்கில் தினமும் மூன்று புரமோ வீடியோக்களை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருவது தெரிந்தது 

அந்த வகையில் இன்று இதுவரை இரண்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளன. முதல் வீடியோவில் சனம் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது போலவும் சுசித்ரா நீதிபதியாக இருந்த அதனை விசாரிப்பது போலவும் இருக்கும் 

இரண்டாவது புரமோவில் சனம் மற்றும் சுரேஷ் இடையே வழக்கு நடப்பது போலவும் பாலாஜி, சனம் ஷெட்டிக்கு ஆதரவாக வாதாடுவது போலவும் இருக்கும். இந்த நிலையில் முதல் புரோமோ வீடியோ திடீரென விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். இது குறித்து விஜய் டிவி விளக்கமளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web