இணையத்தில் வைரலாகும் விஜய் பட நடிகையின் வீடியோ!

 

யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, மற்றும் விஜய்யின் வேலாயுதம் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சரண்யா மோகன் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் க்யூட்டாகவும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது 

vijay saranya

இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சின்மயி பாடிய ’ஒரு தெய்வம் தந்த வீடு’ என்ற பாடலை அவர் பாட அவரது குழந்தைகள் அந்த பாடலை ரசித்துக் கேட்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது 

இந்த பாடலை சரண்யா மோகன் மிக அழகாக பாடி உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே சரண்யா மோகன் ஒரு நாட்டிய பள்ளியை நடத்தி வந்து நடத்தி வருகிறார் என்பதும் அவரது நடன பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

சமீபத்தில் கூட கேரளா சென்று இருந்த நடிகர் சிம்பு அவரிடம் நடனம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web