விஜய்யின் ’பீஸ்ட்’ தொடக்கம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
beast

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது என்பதும் அதன் பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது என்பதும் தெரிந்ததே

ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி ’பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதை அடுத்து இன்று முதல் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது

இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து ஒரு சில வசன காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்று முதல் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web