ஜார்ஜியாவில் வைரலாகும் விஜய்... எப்பவுமே மாஸ் தான்பா 

ஜார்ஜியாவுக்கு சென்ற விஜய் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. 
 
ஜார்ஜியாவில் வைரலாகும் விஜய்... எப்பவுமே மாஸ் தான்பா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பும் பெரும் வெற்றியையும் பெற்றதை அடுத்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்கிறார்.

கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார.  இந்நிலையில் இவர்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி65 படத்தை இயக்குகிறார். அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தன் வீட்டுக்கு அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று வாக்களித்த விஜயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகியது. 

வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக காரில் செல்லாமல் சைக்கிளில் சென்று வாக்களித்து தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஜய் அன்று இரவே ஜார்ஜியாவுக்கு புறப்பட்டார். ஆம், தளபதி65 படத்திற்கான ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியாவுக்கு சென்ற விஜய் அங்கு 16 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

இதில் கலந்து கொண்ட விஜய்யின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதில் விஜய் தற்போது ஜார்ஜியா ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களுக்காக அவர் கையெழுத்திட்ட ஆட்டோகிராப் புகைப் படங்கள் ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகின்றன.

From around the web