TRP முதலிடத்தை பிடித்த பிரபல தொலைக்காட்சி.. எந்த சீரியல் தெரியுமா?
சன் டிவியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது விஜய்.
Thu, 18 Feb 2021

படங்களில் எப்படி பாக்ஸ் ஆபிஸ் சண்டை நடக்கிறதோ அதேபோல் தொலைக்காட்சிகளில் TRPக்காக சண்டைகள் நடக்கின்றன.
முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என போராடி வருகிறார்கள், நிறைய புத்தம் புதிய நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.
எப்போதும் முதல் இடத்தில் சன் தொலைக்காட்சியின் சீரியல்கள், படங்கள் தான் இருக்கும். இப்போது தொலைக்காட்சி வரலாற்றிலேயே என கூறலாம், சன் டிவியை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது விஜய்.
கடந்த வார TRP ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் அதிக TRP ரேட்டிங் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.